பல்வேறு பெண்கள் அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்களுடன் இணைந்து அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் (அஇமுபெக) 10.07.2026 அன்று இந்திய பிரஸ் கிளப்பில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பெண்கள் இடஒதுக்கீட்டுக்கான தேசிய கூட்டமைப்பு என்ற பதாகையின் கீழ், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அன்றைய செய்தியாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.
இந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை 'நாரி சக்தி வந்தன்' (பெண் சக்தியை வணங்குதல்) என்பதோடு இணைத்து, அதன் மூலம் தனது மதவாத நிகழ்ச்சி நிரலை பாஜக அரசாங்கம் முன்னெடுக்கத் துடிக்கிறது.
அன்றைய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அஇமுபெக தேசிய செயலாளர் தோழர் சுவேதா ராஜ், "கடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், பல்வேறு பெண்கள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் இணைந்து பாஜகவின் மதவாத நிகழ்ச்சி நிரலை எதிர்த்துப் பின்தள்ளின. இருப்பினும், 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, இன்றுவரை களத்தில் நடைமுறைப்படுத்தப்படாதது துரதிர்ஷ்டவசமானது. பாஜக அரசாங்கம் இந்தியப் பெண்களிடம் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது. பாஜக அரசாங்கத்தின் பெண்களுக்கு எதிரான இந்த சதி ஒருபோதும் வெற்றி பெறாது" என்று தெரிவித்தார்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நடைமுறையில் இருக்கும் தற்போதைய மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளிலேயே பெண்கள் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்
