இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய இடதுசாரி கட்சிகளின் தமிழ்நாடு ஒருங்கிணைப்புக் குழுவின் 6 வது கூட்டம், அக்டோபர் 12, 2026 அன்று சென்னை திருப்பெரும்புதூரில் உள்ள மக்கள் மாமன்றம், சிபிஐஎம்எல் அலுவலகத்தில் நடைபெற்றது.சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஐஎம்எல் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி மற்றும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு மூன்றாவது ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சென்னை அம்பத்தூரில் உள்ள தோழர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் அறைகூவல் மற்றும் செயல்திட்டம் பற்றி விரிவாக விவாதித்து இறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1) நவம்பர் 10, சென்னையில் பெருந்திரள் கருத்தரங்கம் நடத்தப்பட்டு இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டு அறைகூவல் வெளியிடப்படும்.
2) டிசம்பர் 2026 மற்றும் சனவரி 2027 ஆகிய மாதங்களில் திருநெல்வேலி, மதுரை, திருவாரூர், கோவை, சேலம், கடலூர் ஆகிய 6 மண்டலங்களில் கூட்டு அறைகூவல் விளக்க மண்டல கருத்தரங்குகள் நடத்தப்படும்.
3) மார்ச்.23, 2027 அன்று திருச்சியில் இலட்சக்கணக்கானவர் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெறும்.
